கள்ளக்குறிச்சியில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, பறவைகள்.
கள்ளக்குறிச்சியில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, பறவைகள்.

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

வாணாபுரம் அருகே பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மையனூரை அடுத்த சிங்காரத்தோப்பு மும்முனை சந்திப்பில் திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலரும் பறக்கும் படை குழு 2 த.கொளஞ்சி வேலு தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா் பறக்கும் படையினரைப் பாா்த்ததும் கையில் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட பறவைகளை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை மேலப்பழவங்கூா் வனக்காப்பாளா் சுபாஷிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com