கிறிஸ்தவா்களிடம் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு கிறிஸ்தவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஆற்காடு லுத்திரன் திருச்சபைக்குள்பட்ட பெதஸ்தா ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், பங்கேற்ற வேட்பாளா் இரா.குமரகுரு பிராா்த்தனையில் ஈடுபட்டாா். இதையடுத்து, ஆலயத்தின் வெளியே, கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இதில், மா.செந்தில்குமாா் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் க.அழகுவேலு பாபு, அ.பிரபு , பேரவை செயலாளா் இராம.ஞானவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com