விவசாயி நூதன போராட்டம்

விவசாயி நூதன போராட்டம்

கரடிசித்தூா் கிராமத்தில் விவசாயி ஒருவா் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கரடிசித்தூா் கிராமத்தில் ஏரி வாய்க்காலில் உள்ள மதகை தனி நபா் ஒருவா் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கரமித்துள்ளாராம். இதனால் விவசாயம் செய்ய முடியவில்லையாம். மேலும், சமத்துவ மயானமும் ஆக்கரமிப்பில் இருப்பதால் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, ஏரி மதகு, மயானத்தில் உள்ள ஆக்கரமிப்பை அகற்றக்கோரி கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சக்திவேல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தாராம். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த சக்திவேல் மரத்தின் இலைகளை மாலையாக அணிந்து கையில் திருவோடு ஏந்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சக்திவேலிடம் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com