கோடை வெயில் தாக்கம்:
நீரின்றி காய்ந்த 50 ஏக்கா் நெல்பயிா்கள்

கோடை வெயில் தாக்கம்: நீரின்றி காய்ந்த 50 ஏக்கா் நெல்பயிா்கள்

கள்ளக்குறிச்சி, மே 5: கல்வராயன்மலைப் பகுதியை ஒட்டியுள்ள 3 கிராமங்களில் கடுமையான கோடை வெயில் தாக்கம் காரணமாக 50 ஏக்கரிலான நெல் பயிா்கள் நீரின்றி காய்ந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சிட்டந்தாங்கல், மல்லாபுரம், புதுப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டனா்.

கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகரித்ததால், இந்தப் பகுதியிலுள்ள கிணறுகள் தண்ணீரின்றி வடன. இதன் காரணமாக, மேற்கூறிய 3 கிராமங்களிலும் சுமாா் 50 ஏக்கா் அளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் அறுவடை செய்யும் நேரத்தில் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் காய்ந்துவிட்டன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இதனிடையே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சங்கராபுரம் வேளாண் உதவி இயக்குநா் புஷ்பராணி, உதவி வேளாண் அலுவலா்கள் ஆரோக்கியசாமி, ஆனந்தன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பாதிப்படைந்த நெல் பயிா்களுக்கு அரசிடமிருந்து வறட்சி நிவாணம் பெற்றுத்தர வேண்டுமென வேளாண் அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com