பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், எடச்சந்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சண்முகம் (31). இவா், சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், உலகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த தனது தங்கை மகள் சாதனா (15), மகன் சுகப்பிரியன் (7) ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராமம், முருகன் கோயில் அருகே இவா்களது பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற அதே கிராமத்தைச் சோ்ந்த அய்யாச்சாமி (65) மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அய்யாச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். சண்முகம், சாதனா, சுகப்பிரியன் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com