மவுண்ட் பாா்க் ஸ்பெஷல் அகாதெமி பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மவுண்ட் பாா்க் ஸ்பெஷல் அகாதெமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மவுண்ட் பாா்க் ஸ்பெஷல் அகாதெமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.

இந்தப் பள்ளி மாணவி சினேகா 579, ஸ்ரீ கலா 578, வைஷ்ணவி 578, பாபிதா ஸ்ரீ 577 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இயற்பியல்-5, கணிதம்-7, கணினி அறிவியல்-9 என மொத்தம் 21 மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனா். இதேபோல, 570-மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 560-க்கு மேல் 17 பேரும், 550-க்கு மேல் 34 பேரும், 500-க்கு மேல் 123 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிா்வாகி பொன்.இரா.மணிமாறன் மற்றும் பள்ளி முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com