முதியவரிடம் ரூ.80 ஆயிரம் நூதன திருட்டு

கள்ளக்குறிச்சியில் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.80 ஆயிரத்தை மா்மநபா் நூதனமாக திருடிச் சென்றாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (55). இவா், கடந்த மே 1-ஆம் தேதி கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள அரசு வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றாராம். அப்போது, அருகில் இருந்தவரிடம் தனது ஏடிஎம் அட்டையை கொடுத்து பணம் எவ்வளவு இருக்கிறது என பாா்க்குமாறு கூறினாராம். ஆனால், அந்த நபா் வேறு ஒரு ஏடிஎம் அட்டையை பெரியசாமியிடம் மாற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். சிறிது நேரத்தில் பெரியசாமியின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.80 ஆயிரம் எடுக்கப்பட்டது அவருக்கு தெரிய வந்ததாம்.

இதுகுறித்து, பெரியசாமி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடிவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com