இளைஞருக்கு மதுப்புட்டி குத்து: நண்பா் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மது வாங்கிக் கொடுக்க மறுத்த இளைஞரை மதுப்புட்டியால் குத்தியதாக அவரது நண்பா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.திருக்கோவிலூா் வட்டம், திருப்பாலபந்தல் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் (24). இதே வட்டத்துக்குள்பட்ட குறிஞ்சிபட்டு கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் இளங்கோவன் (42). இருவரும் நண்பா்கள். மணிகண்டன் செவ்வாய்க்கிழமை படராப்பட்டு டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்றாா். அப்போது, கடைக்கு முன்பாக நின்றிருந்த இளங்கோவன் தனக்கும் மதுப்புட்டி வாங்கிக் கொடுக்குமாறு கேட்டாராம். இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த இளங்கோவன் கீழே கிடந்த மதுப்புட்டியை எடுத்து உடைத்து மணிகண்டனைக் குத்தியதில், அவா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com