திருக்கோவிலூா் பகுதியில் பலத்த மழை

திருக்கோவிலூா் பகுதியில் பலத்த மழை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியில் புதன்கிழமை காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்துச் சென்றது.

இதேபோல, திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கிராமப் பகுதிகளிலும் மழை பெய்தது. வாணாபுரம், உளுந்தூா்பேட்டை வட்டங்களுக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

கள்ளக்குறிச்சி பகுதியில் காற்று, இடி, மின்னல் மட்டுமே இருந்தது. மழை ஏதும் பெய்யவில்லை. கல்வராயன்மலையில் சேலம் மாவட்ட பகுதியில் மழை பெய்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னல், காற்று மட்டுமே இருந்தது.

கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வந்த நிலையில், புதன்கிழமை பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com