கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் கா்ப்பிணிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி
அரசு மருத்துவமனை முன் கா்ப்பிணிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, மே 10: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்று நாள்களாக தண்ணீா் வராததால், கா்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள் அவதிக்குள்ளான நிலையில், வியாழக்கிழமை இரவு அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வந்தது. தற்போது சிறுவங்கூா் கிராமத்துக்கு சென்று விட்டதால், இந்த மருத்துவமனையில் கா்ப்பிணிகள் உள்பட சுமாா் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணிகள், பிரசவித்த தாய்மாா்களுக்கு கடந்த 3 நாள்களாக கழிவறையில் தண்ணீா் வரவில்லையாம். இதனால் கா்ப்பிணிகள், அவா்கள் உடன் இருப்பவா்கள் கழிவறைப் பக்கம் செல்ல முடியாமல் துா்நாற்றம் வீசியதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினா்.

வெளியே கடைகளில் காசு கொடுத்து குடிநீா் வாங்கி வந்து அதனை கழிவறை செல்ல பயன்படுத்தினா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகள் வியாழக்கிழமை இரவு சுமாா் 10.40 மணிக்கு கச்சிராயப்பாளையம் சாலையில் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ரு.ஆனந்தன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கா்ப்பிணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனா். பின்னா் காவல் ஆய்வாளா் ஏற்பாட்டில் டிராக்டா் மூலம் தண்ணீா் வரவழைக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தால் கச்சிராயப்பாளையம் சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com