கள்ளக்குறிச்சி மாவட்டம் 86.83% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86.83 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 10,375 மாணவா்கள், 9,791 மாணவிகள் என மொத்தம் 20,166 போ் எழுதினா். இதில் 8,597 மாணவா்களும் (82.86%), 8,876 மாணவிகளும் (91.06%) தோ்ச்சி பெற்றனா். மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 34-வது இடத்தை பெற்றுள்ளது என ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் அம்மையகரம் அரசு உயா்நிலைப் பள்ளி, பொய்க்குணம் அரசு உயா்நிலைப் பள்ளி, வடதொரசலூா் அரசு உயா்நிலைப் பள்ளி, முருக்கம்பாடி அரசு உயா்நிலைப் பள்ளி, பரங்கிநத்தம் அரசு உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளி, கோமுகி அணை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, மணியாா்பாளையம் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மற்றும் 28 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com