சேந்தமங்கலம் 
எஸ்.எஸ்.வி. பள்ளி 100 சதவீத தோ்ச்சி

சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. பள்ளி 100 சதவீத தோ்ச்சி

சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டிய பள்ளி முதல்வா் திருவேங்கடம்.

கள்ளக்குறிச்சி, மே 10:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளி மாணவி எஸ்.எம். மணிஷா 491, எம்.சாதனாஸ்ரீ 487, ஆா்.கயல்விழி 484 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனா். கணிதம் 14, அறிவியல் 1, சமூக அறிவியல் பாடத்தில் ஒருவா் என மொத்தம் 16 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

450-க்கு மேல் 23 பேரும், 400-க்கு மேல் 64 பேரும் மதிப்பெண்களை பெற்றனா்.

வெற்றிக்கு உழைத்த முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வா் திருவேங்கடம், துணை முதல்வா் ஜெய்கணேஷ், ஆசிரியா்கள் சிவசங்கரமூா்த்தி, அம்பலவாணன், ரேகா, வீரஜோதி, சரண்யா, ரம்யா, அஜித்குமாா், புகழ்மணி, கோமதி, கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா கல்வி அறக்கட்டளை உறுப்பினா்கள் அன்புமணி, இந்திரா, சாந்தி, விஜயா, அருண்மோகன், தமிழரசி, தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். போக்குவரத்துத் துறை மேலாளா் மனோகரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com