மவுண்ட் பாா்க் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மவுண்ட் பாா்க் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மவுண்ட்பாா்க் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

இந்தப் பள்ளி மாணவி ஆா்.சாய்ஸ்ரீ 497, கே. கமல்ராஜ் 496, எஸ்.காவ்யாஸ்ரீ 495 மதிப்பெண்கள் பெற்றனா். கணிதம் 58, அறிவியல் 19, சமூக அறிவியல் 6 என மொத்தம் 83 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.

இதே போல 490- மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 480-க்கு மேல் 32 பேரும், 470-க்கு மேல் 59 பேரும், 460-க்கு மேல் 86 பேரும், 450-க்கு மேல் 110 பேரும், 425-க்கு மேல் 146 பேரும், 400-க்கு மேல் 184 பேரும், 350-க்கு மேல் 231 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் பொன் இரா.மணிமாறன் பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினாா் (படம்).

அப்போது பள்ளி முதல்வா் கலைச்செல்வி, துணை முதல்வா் முத்துக்குமரன், ஆசிரியா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்

X
Dinamani
www.dinamani.com