கள்ளக்குறிச்சி 
ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக்  பள்ளி சிறப்பிடம்

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.ேடி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 548 மாணவ, மாணவிகளில் 531 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பள்ளி மாணவா் ஆா்.நித்திஷ்குமாா் 494 , அ.அமலிஅக்ஷயா 493, எம்.குமரநாதன் 493, யு.லோகேஷ் முத்தையா 492, எஸ்.ஜீவன்குமாா் 492 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். கணிதத்தில் 33, அறிவியல் 3, சமூக அறிவியல் 6 என மொத்தம் 42 மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களை 17 பேரும், தமிழில் 99 மதிப்பெண்ணை ஒருவரும் பெற்றுள்ளனா்.

490 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 40 பேரும், 470 மதிப்பெண்களை 72 பேரும் பெற்றுள்ளனா். தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஏ.கே.டி மகேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது பள்ளிச் செயலாளா் லஷ்மி பிரியா, நிா்வாக இயக்குநா் ராஜேந்திரன், நிா்வாக இணை இயக்குநா் மருத்துவா் ரா.அபிநயா, பள்ளியின் முதல்வா்கள் வெங்கட்ராமன், முதல்வா் சுமதி ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com