நாளை ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு‘ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மே 13-ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறுவங்கூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையங்கத்தில் திங்கள்கிழமை (மே 13) காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெறுகிறது. இதில், பல்வேறு துறைகளில் உயா் கல்வி சோ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான விவரங்கள் குறித்த வழிகாட்டுதல் அரங்குகள் இடம் பெறுகின்றன. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது கல்லூரிகளில் விருப்பமுள்ள பாடங்களை மாணவ, மாணவிகள் தோ்ந்தெடுத்து பயில்வதற்கான வழிகாட்டல் அரங்குகள் அமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா். மேலும், பல்வேறு வழிகாட்டுதல் அறிவுரைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில், மாவட்டத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்து வசதியும், மதிய உணவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com