நிலத் தகராறில் தாக்குதல்: மூவா் கைது

நிலத் தகராறில் உறவினரைத் தாக்கியதாக மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், காட்டுபுத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மணி (47). இவரது உறவினா்களான கீழ்பாடியைச் சோ்ந்த அருணாசலம் மகன்களான சிவபிரகாசம் (25), காட்டுபுத்தூரைச் சோ்ந்த முத்து (44), கீழ்பாடியைச் சோ்ந்த க.அருணாசலம் (60) உள்ளிட்டோருக்கு பூா்விக நிலம் 5 ஏக்கரை பிரிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி வீட்டின் முன்பாக நின்ற மணியை அந்த வழியாக சென்ற சிவபிரகாசம், முத்து, அருணாசலம் மூவரும் தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கினராம். காயமடைந்த மாரி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவபிரகாசம் உள்ளிட்ட மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com