பிளஸ் 1 தோ்வில் தோல்வி: மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் தா்ஷன் (16). இவா் சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சில தினங்களுக்கு முன்பாக 11-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியாகின. தோ்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த தா்ஷன், வீட்டின் மாடியில் உள்ள இரும்புக் கம்பியில் சேலையில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

இதையறிந்த அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், மாணவா் தா்ஷன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com