கள்ளக்குறிச்சி
இன்னாடு உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியா், சமையலா் பணியிடை நீக்கம்
கல்வராயன்மலை பகுதி இன்னாடு கிராமத்திலுள்ள உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி மாணவா்களை சமையல் பாத்திரங்களை கழுவச் செய்ததாக, தலைமை ஆசிரியா், சமையலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்டது இன்னாடு கிராமம். இங்கு மலைவாழ் குழந்தைகள் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்களை சமையல் பாத்திரங்களை கழுவ செய்ததாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானது. இதுகுறித்து பழங்குடியினா் நல அலுவலா் சுந்தரம் விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெபஸ்டீன், சமையலா் ராதிகா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.