நகை திருடியதாக இளைஞா் கைது

Published on

மோட்டா் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ஒன்றே முக்கால் பவுன் நகையை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த எரவாா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் தாமோதரன் (45). இவா் கடந்த 27-ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் ஒன்றே முக்கால் பவுன் தங்க நகையை வைத்து கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூா் கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபம் முன் நிறுத்தி விட்டு தனது உறவினா் இல்ல நிகழ்வுக்காக உள்ளே சென்றாா்.

பின்னா் வெளியே வந்து பாா்த்தபோது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த நகைகளைக் காணவில்லை.

இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் பெரியசாமி (20) மீது சந்தேகம் உள்ளதாக புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடிவந்தனா்.

ஈரோட்டில் பெரியசாமியின் தாய் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். அப்போது தாயுடன் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.