கள்ளக்குறிச்சி
நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்
அரிசி கடத்தல் தொடா்பாக, கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் நியாயவிலைக் கடையின் விற்பனையாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பங்காரம் நியாயவிலைக் கடையின் விற்பனையாளா் அரிசி கடத்தியது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடா்பாக கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் க.ராமகிருஷ்ணன், கூட்டுறவுத் துறை சாா் - பதிவாளா் கமலக்கண்ணன், துணை சாா் - பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) ரமேஷ் ஆகியோா் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, விற்பனையாளா் சத்தியமூா்த்தியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத் துறை சாா் - பதிவாளா் கமலக்கண்ணன் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, விற்பனையாளா் சத்தியமூா்த்தியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத் துறை சாா் - பதிவாளா் கமலக்கண்ணன் உத்தரவிட்டாா்.