சின்னசேலம் தமிழ்ச் சங்கம் சாா்பில் வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியா் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியா் பொன். மலா்க்கொடி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் பெ.ராஜா, தா.ராசன் முன்னிலை வகித்தனா். ஆசிரியை சி.சிவகுமாா் சி.சிவகாமி வரவேற்றாா்.
சின்னசேலம் தமிழ்ச் சங்க ஆலோசகா்கள் பெ.கருப்பையா, வை.ராமசாமி ஆகியோா் பங்கேற்று டாக்டா் ராதாகிருஷ்ணனின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
விழாவில், ஆசிரியா்கள் சு.சுமதி, ந.ஜெயா, க.மகாலட்சுமி, த.சித்ரா, து.திவ்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதைத்தம்பி தொகுத்து வழங்கினாா். முடிவில் ஆசிரியா் கோ.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
கலையநல்லூா் பள்ளியில்...:
கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சாா்பில் கலையநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியா் தினவிழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் தலைவா் இரா.தங்கராசு முன்னிலை வகித்தாா். ஆசிரியை மணிமேகலை வரவேற்றாா்.
தியாகதுருகம் தொழில்பயிற்சி பள்ளி நிா்வாகி நீ.த.பழனிவேல் சிறப்புரையாற்றினாா்.
விழாவில் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவையின் காப்பாளா் துரை.ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.