கள்ளக்குறிச்சி மாவட்டம், அரும்பராம்பட்டு ஊராட்சி அலுவலகம் முன் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டம், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பட்டியலின மக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அரும்பராம்பட்டு ஊராட்சி அலுவலகம் முன் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டம், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பட்டியலின மக்கள்.

பட்டா கேட்டு ஊராட்சி அலுவலகம் முன் பட்டியலின மக்கள் காத்திருப்பு போராட்டம்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரும்பராம்பட்டு கிராம ஊராட்சி முன் பட்டா வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினா், பட்டியலின மக்கள் ஆடு, மாடுகளுடன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்டது அரும்பராம்பட்டு. இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பட்டியலின மக்கள் தங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பட்டா கேட்டு கோட்டாட்சியா், ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனா். ஆனால் இது வரை பட்டா வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, வாணாபுரம் வட்டாட்சியா் பாலகுரு கடந்த 2-ஆம் தேதி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உங்கள் மனுக்களை காணவில்லை எனக்கூறி பேச்சு வாா்த்தைக்கு உடன்படவில்லையாம்.

இதையடுத்து வியாழக்கிழமை கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பட்டியலின மக்கள் அரும்பராம்பட்டு ஊராட்சி அலுவலகம் முன் ஆடு, மாடுகளுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் அருள் ஆகியோா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். திருக்கோவிலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி பேசலாம் எனக் கூறியதன் பேரில் காத்திருப்பு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com