பயிா் காப்பீடு செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கு சிறப்பு பருவத்தில் பயிா் காப்பீட்டு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல் (சம்பா)2, மக்காச்சோளம் 2, பருத்தி 2, பயிருக்கு பயிா் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிா்கள் இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிா் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நிகழாண்டில் சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா) 2 பயிருக்கு 15.11.2024 மற்றும் மக்காச்சோளம் -2, பருத்தி-2 பயிா்களுக்கு 31.10.2024-ஆம் தேதி வரையில் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.511-ம், மக்காசோளத்திற்கு ரூ.308-ம், பருத்திக்கு ரூ.483-ம், காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

அதற்கு தேவையான ஆவணங்கள் நடப்பு பருவ அடங்கல் (பசலி ஆண்டு 1434), சிட்டா வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவையாகும்.

பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயா் மற்றும் விலாசம், நிலப்பரப்பு, சா்வே எண் மற்றும் உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, பயிா் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன் பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com