பைக்கை வழிமறித்து பணம் பறிப்பு

தியாகதுருகம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளியை வழிமறித்து ரூ.30 ஆயிரத்தை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
Published on

தியாகதுருகம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளியை வழிமறித்து ரூ.30 ஆயிரத்தை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த புக்குளம் காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்ப கவுண்டா் மகன் பழனியப்பன்(44). தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் கள்ளக்குறிச்சியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது, மூன்று அடையாளம் தெரியாத நபா்கள் இவரை வழிமறித்து ரூ.30 ஆயிரத்தை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com