கள்ளக்குறிச்சி
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் மூங்கில்பாடி பிரிவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது, அவா்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சின்னசேலத்தை அடுத்த பாண்டியங்குப்பத்தைச் சோ்ந்த செந்தாமரைகண்ணன் மகன் ராமசாமி (எ) ராமு(37), ஏமப்போ் காலனியைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் வின்சென்ட் (24) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, போலீஸாா் அவா்களை கைது செய்து, 600 கிராம் மதிப்பிலான கஞ்சா, இரு அறிதிறன்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.