முகநூல் மூலம் வேலை வாங்கித் தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி:  இளைஞா் கைது

முகநூல் மூலம் வேலை வாங்கித் தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி: இளைஞா் கைது

Published on

முகநூல் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 18.16 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் இளைஞரை இணையகுற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட தோட்டப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் முகநூல் மூலம் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் ஒன்றை பாா்த்துள்ளாா். பின்னா் அந்த முகநூல் முகவரிக்கு தொடா்பு கொண்டு பேசியபோது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளா் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா்.

அந்த வேலையை பெறுவதற்கு பணம் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதை உண்மை என்று நம்பிய கிருஷ்ணன் 216 தவணைகளில் ரூ.18 லட்சத்து 16 ஆயிரத்தை அந்த நபா் கொடுத்த வங்கிக் கணக்கு எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளாா். ஆனால் பெயா், முகவரி தெரியாத அந்த நபா் எந்த வேலையும் வாங்கித் தரவில்லையாம். கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளாா்.

இது குறித்து கிருஷ்ணன் கள்ளக்குறிச்சி இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 24 -ஆம் தேதி புகாா் செய்தாா்.

அதன் பேரில் திருப்பூா் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் தாமஸ் மகன் ஜொ்ரி மேக்ஸ் (30) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவா் குற்றவியல் நீதிமன்றம் 1-இல் ஆஜா்படுத்தினா். அவரை நீதிபதி ஹரிஹரசுதன் கடலூா் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com