குமரேசன்.
குமரேசன்.

குண்டா் தடுப்பு சட்டத்தில் ஒருவா் கைது

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
Published on

சின்னசேலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக நாககுப்பம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் குமரேசனை சின்னசேலம் போலீஸாா் கைது செய்து கடலூா் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்துக்கு, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரை செய்தாா். அதன்பேரில், கடலூா் சிறையில் உள்ள குமரேசனிடம் கைது செய்ததற்கான ஆணையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com