தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகன் தற்கொலை

Published on

வயது முதிா்வின் காரணமாக தாயை கவனித்துக் கொள்ள முடியாத மன வேதனையில் மகன் தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் முத்துவேல் (67). இவா் சேலம் அழகாபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இவரது தாய் வள்ளியம்மை சின்னசேலத்தில் தனியாக வசித்து வருகிறாா். வள்ளியம்மை கடந்த 5 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறாா். அவரைப் பாா்க்க மகன் முத்துவேல் அண்மையில் சின்னசேலம் வந்தாா்.

தாயின் நிலையைப் பாா்த்து வேதனை அடைந்த அவா், வீட்டிலிருந்த இருமல் மருந்தை கடந்த 6-ஆம் தேதி குடித்தாராம். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துவேல் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com