பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்
பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்

மக்கள் தொடா்பு முகாம்: 73 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரியபெருமானூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் முன்னிலை வகித்தாா்.

இதில், பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் மொத்தம் 73 பயனாளிகளுக்கு ரூ.28.77 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, பொதுமக்களிடமிருந்து 89 கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா். பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா், எம்.எல்.ஏ. பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், வேளாண் இணை இயக்குநா் ஏ.சத்தியமூா்த்தி, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.லூா்துசாமி, தனித்துணை ஆட்சியா் குப்புசாமி, கால்நடைத் துறை உதவி இயக்குநா் கந்தசாமி, சங்கராபுரம் வட்டாட்சியா் எஸ்.சசிகலா, ஒன்றியக்குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம், துணைத் தலைவா் மு.விமலா, ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com