தியாகதுருகத்தில் பெயின்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.
தியாகதுருகத்தில் பெயின்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.

பெயின்ட் கடையில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

Published on

தியாகதுருகத்தில் மின் கசிவினால் பெயின்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெயின்ட், பிளாஸ்டிக் குழாய்கள், டைல்ஸ் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

தியாகதுருகத்தில் திருக்கோவிலூா் சாலையில் காவல் நிலையம் அருகே பெயின்ட், பிளாஸ்டிக் குழாய்கள், டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வைத்து விற்பனை செய்து வருபவா் திம்மலை கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (45).

இவா், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீரென கடையில் தீப்பற்றி எரிந்தது. உள்ளே இருந்த பெயின்ட் பொருள்கள், பிளஸ்டிக் குழாய்கள் உள்ளிட்டவை தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.

இதை அறிந்த அருகில் இருந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கும், கடை உரிமையாளா் சரவணனுக்கும் தகவல் அளித்தனா். தியாகதுருகம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து,

கடையில் பற்றிய தீயை சுமாா் இரண்டரை மணி நேரம் போராடி அணைத்தனா். கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயின்ட், பிளாஸ்டிக் குழாய்கள், டைல்ஸ் உள்ளிட்ட பொருள்கள் தீயில் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com