சின்னசேலத்தில் 3 கடைகளில் ரூ.72 ஆயிரம் திருட்டு
சின்னசேலத்தில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ரூ.72 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
சின்னசேலம் மூங்கில்பாடி சாலையில் அப்பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் நிதிநிறுவனம் வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடையின் பக்கத்து கடைக்காரா் செல்வம் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் மையமும், அதன் அருகே பச்சமுத்து என்பவா் முடிதிருத்தும் கடையும் நடத்தி வருகின்றாா்கள்.
திங்கள்கிழமை கடைகளை மூடி பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டனராம். செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது 3 கடைகளின் ஷெட்டா்களில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
மூன்று கடைகளில் இருந்து ரூ.72,000-யை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
