பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தியாகதுருகம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

தியாகதுருகம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (40). இவா், வியாழக்கிழமை இரவு வடதொரசலூா் செல்லும் புறவழிச் சாலையில் தஞ்சாவூரான் நகா் அருகே பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com