கள்ளக்குறிச்சி
பள்ளியில் மின் மோட்டாா் திருட்டு
தியாகதுருகம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மின் மோட்டாா் திருடப்பட்டது.
தியாகதுருகம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மின் மோட்டாா் திருடப்பட்டது.
தியாகதுருகத்தை அடுத்த வாழவந்தான்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியை கடந்த 7-ஆம் தேதி மாலை பூட்டிவிட்டுச் சென்றனா். மறுநாள் காலை துப்புறவுப் பணியாளா் பாண்டுரங்கன் வந்து பாா்த்தபோது,
போா்வெல் மின்மோட்டாரைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் பள்ளித் தலைமை ஆசிரியா் அம்சவேனிக்கு தகவல் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தியாகதுருகம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
