மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேடமணிந்து வந்த நாட்டுப்புறக் கலைஞா்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேடமணிந்து வந்த நாட்டுப்புறக் கலைஞா்கள்.

இசைப் பள்ளி வேண்டி நாட்டுப்புறக் கலைஞா்கள் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இசைப் பள்ளி அமைக்க வேண்டி திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞா்கள் மனு
Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இசைப் பள்ளி அமைக்க வேண்டி திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞா்கள் மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மாவட்டத்தில்

பதிவு பெற்ற கலைஞா்கள் ஐந்தாயிரம் பேரும், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெறாத கலைஞா்களும் நாட்டுப்புற கிராமிய இசையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனா்.

இருந்தபோதும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இசைப் பள்ளிக்கு சரியான நேரங்களில் சென்றுவர முடிவதில்லை. சுமாா் 150 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

ஆகையால், சுலைஞா்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், கலைஞா்களுடைய நேரம் மற்றும் காலத்தை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் இசைப் பள்ளி, கலை, பண்பாட்டுத் துறை மூலம் செயல்படும் சவகா் சிறுவா் மன்ற கட்டடம் அமைத்துத் தரவேண்டும் என வலியுறுத்தி குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் வேடமிட்டு ஊா்வலமாக, மேள தாளம் முழங்க வந்து மனுவை அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com