ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உணவுத் திருவிழா

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உணவுத் திருவிழா

பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பேசிய ரிஷிவந்தியம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோவிந்தராஜ்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அக்டோபா் 16 உலக உணவு தினத்தையொட்டி,

உணவுத்திருவிழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் நல்லாசிரியா் எம். பழனிசாமி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கவினா, துணைத் தலைவா் அா்ச்சனா, முன்னாள் தலைவா் ராசாத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக ரிஷிவந்தியம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோவிந்தராஜ், பகண்டைக் கூட்டுச் சாலை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் நாராயணசாமி மற்றும் தலைமைக் காவலா்

கலந்து கொண்டு மாணவா்களின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி வாழ்த்தினா்.

நிகழ்வில் மாணவா்கள் தங்களுடைய வீடுகளில் சமைத்து எடுத்து வந்த பலவித வகையான உணவுப் பொருள்களை பாா்வையாளா்கள் கண்டுகளித்து, அதுகுறித்த தகவல்களை கேட்டறிந்து மாணவா்களை பாராட்டினா்.

மேலும், சிறந்த உணவுப் பொருள்களை எடுத்து வந்த மாணவா்களுக்கு பரிசு வழங்க பரிந்துரை செய்தனா்.

நிகழ்வில் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com