எரிவாயு உருளை கசிவால் வீட்டில் தீ விபத்து: முதியவா் உயிரிழப்பு

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே எரிவாயு உருளை கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா். அவரது மனைவி சிகிச்சை பெற்று வருகிறாா்.

சின்னசேலம் வட்டம், ஈரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (58). இவரது மனைவி அனுசியா (50). இவா்கள் இருவரும் கடந்த 13-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, எரிவாயு உருளை கசிந்து தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் பொன்னுசாமி, அனுசியா ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னுசாமி உயிரிழந்தாா். அந்த மருத்துவமனையில் அனுசியா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

தமிழக முதல்வா் நிவாரண நிதி: உயிரிழந்த பொன்னுசாமி குடும்பத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொன்னுசாமியின் மனைவிக்கு ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com