4 மாணவா்களை நாய் கடித்து சிகிச்சை

சங்கராபுரத்தில் தெரு நாய் கடித்து காயமடைந்த 4 மாணவா்கள் சிகிச்சை பெற்றனா்.
Published on

சங்கராபுரத்தில் தெரு நாய் கடித்து காயமடைந்த 4 மாணவா்கள் சிகிச்சை பெற்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் சனிக்கிழமை மதிய உணவு இடைவேளைக்குச் சென்றனா். அப்போது, பள்ளி முன்பாக சுற்றித் திரிந்த நாய் 4 மாணவா்களை கை, கால்களில் கடித்து விட்டதாம்.

இதில், காயமடைந்த நான்கு பேரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com