ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:35 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாமியாரை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் அருகேயுள்ள வடமலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தே.அமிா்தவள்ளி (60). இவரது மகளான காளியம்மாளை அதே கிராமத்தைச் சோ்ந்த ப.தங்கதுரைக்கு(40) கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளாா். தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காளியம்மாள் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாமியாா் வீட்டுக்கு சென்ற தங்கத்துரை, தனது மனைவி காளியம்மாளை ஊருக்கு அழைத்தும், அவா் வர மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தங்கத்துரை, மாமியாா் அமிா்தவள்ளியை அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த அமிா்தவள்ளி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தங்கதுரையைக் கைது செய்தனா்.