சுறா படப்பிடிப்பு: மீனவ மக்களுக்கு நடிகர் விஜய் பொங்கல் விருந்து

புதுச்சேரி, ஜன. 12: நடிகர் விஜய் நடிக்கும் "சுறா' படப்பிடிப்பு புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப் பகுதியான அனுமந்தைக்குப்பம் மீனவ கிராமத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் மீனவராக நடிக்கிறா
சுறா படப்பிடிப்பு: மீனவ மக்களுக்கு நடிகர் விஜய் பொங்கல் விருந்து

புதுச்சேரி, ஜன. 12: நடிகர் விஜய் நடிக்கும் "சுறா' படப்பிடிப்பு புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப் பகுதியான அனுமந்தைக்குப்பம் மீனவ கிராமத்தில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் மீனவராக நடிக்கிறார். மீனவர்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் அந்த ஊர் மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் செவ்வாய்க்கிழமை மதியம் விருந்து கொடுத்தார். மீனவ மக்களுடன் அவரும் உட்கார்ந்து சாப்பிட்டார். புதுச்சேரி மாநில விஜய் தலைமை நற்பணி மன்றத்தின் தலைவரும் எம்எல்ஏவுமான என்.ஆனந்து உடனிருந்தார்.

இந்த ஊரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் கூறுகையில், இந்த விருந்தை நாங்கள் பொங்கல் விருந்தாகக் கருதுகிறோம் என்று கூறினர். நடிகர் விஜய்யைப் பார்க்கவும், அவருடன் உட்கார்ந்து சாப்பிடவும் முதியோர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என்று சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டனர். நடிகர் விஜய் ஒவ்வொருவராக பரிமாறினார். இளைஞர்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். பலர் அவருடன் கைக்குலுக்க முண்டியடித்தனர்.

அந்த விருந்தில் நடிகர் விஜய் பேசுகையில், சுறா படம் கடலோர பகுதி மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அந்தப் படத்தில் நான் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கடந்த ஒருவாரமாக இங்கு ஷூட்டிங் நடக்கும்போது இரவு நேரத்திலும் பலர் வந்து எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். ஷூட்டிங் முடிவதற்கு இரவு 2 மணிக்கு மேலாகிறது. அதற்கு மேல் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று கருதிதான் உங்கள் அனைவருடனும் சாப்பிட ஆசைப்பட்டு இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். ஒத்துழைப்புக்கு நன்றி என்றார் விஜய்.

விருந்தில் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்த ஊரைச் சேர்ந்த மூதாட்டி நாகமுத்து (60) கூறுகையில், விஜய் கொடுத்த விருந்து நன்றாக இருக்கிறது என்றார். இளைஞர் சதீஷ் (18) கூறுகையில், நடிகர் விஜய் கையால் பரிமாறினார். அதைப் சாப்பிடுவதில் சந்தோஷம். விருந்து நன்றாக இருந்தது என்றார்.

அனுமந்தைகுப்பம் மீனவர் பஞ்சாயத்தின் துணைத் தலைவர் சுந்தர் கூறுகையில், இந்தப் படம் எடுக்க "செட் ' போட ஆரம்பித்ததில் இருந்து நாங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வருகிறோம்.

ஊர் மக்களைக் கூட்டி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து எந்தப் பொருளையும் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தோம். அந்த வகையில் மக்களும் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார்கள். இந்தப் படம் மீனவர்களின் கதை. எங்கள் ஊரில் அது படமாவது பெருமையாக இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com