ராஜீவ்காந்தி உயிர்காக்கும் உயர் சிகிச்சை காப்பீடு திட்டம் அறிமுகம்

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரியில் ராஜீவ்காந்தி உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக்  காப்பீடு திட்டம் ஏப்ரல் 2-ல் தொடங்க இருப்பதாக புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் தெரிவித்தார். ÷வில்லியன

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரியில் ராஜீவ்காந்தி உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக்  காப்பீடு திட்டம் ஏப்ரல் 2-ல் தொடங்க இருப்பதாக புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

÷வில்லியனூர் கூடப்பாக்கத்தில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி மற்றும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1-க்கு 1 கிலோ அரிசி, கோதுமை வழங்கும் திட்டம்  தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திட்டத்தை மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

÷விழாவில் முதல்வர் வி.வைத்திலிங்கம் பேசியது: நோயுற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான ராஜீவ்காந்தி மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஏப்ரல் 2-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறோம். இது ஏற்கெனவே யேனம், மாஹே பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. இத் திட்டத்தின் மூலம் ஏழை எளியோர் உயர் மருத்துவ அறுவை சிகிச்சைகளை தாங்கள் விரும்பும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com