காரைக்கால், ஜூலை 14: மும்பையில் புதன்கிழமை நேரிட்ட தொடர் குண்டு வெடிப்பையடுத்து, காரைக்கால் கடலோரக் காவல் நிலைய போலீஸôர் நவீன கண்காணிப்புக் கருவி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வியாழக்கிழமை கடல் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, காரைக்கால் கடலோரக் காவல் நிலைய போலீஸôர் தங்கள் வசம் உள்ள 2 நவீன ரோந்துப் படகுகளை எடுத்துக் கொண்டு வியாழக்கிழமை காலை,
காரைக்கால் மாவட்ட கடல் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மீன்பிடி படகுகளை நிறுத்தி, ஆவணங்கள் மற்றும் எந்த ஊரை சேர்ந்த படகு என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர். மேலும் புதிய நபர்கள் ஊடுருவல் தெரிந்தால் போலீஸôருக்கு தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களிடம் கூறினர்.