புதுச்சேரி, ஜூலை 14: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் புதைக்கப்பட்ட பழைய மின் கேபிள்களை மாற்ற வேண்டும் என்று பாஜக மாவட்ட பொதுச் செயலர் பி.கிருஷ்ணகாந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இப்பகுதியில் புதைக்கப்பட்ட மின் கேபிள்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டது என்று மின்துறை அதிகாரிகள் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
அதனால் இப்பகுதியில் மின்தடை ஏற்படுவதை தடுக்கும் விதமாக பழைய கேபிள்களை மாற்ற வேண்டும்.
இல்லையேல் தொண்டர்களை திரட்டி மின்தடை தீரும்வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.