புதுச்சேரி, ஜூலை 14: புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். சார்பில் உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சி அண்மையில் கொண்டாடப்பட்டது.
÷புதுச்சேரி என்.எஸ்.எஸ். முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
÷திட்ட அலுவலர் முத்துகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, பள்ளியின் முதல்வர் நடராஜன், துணை முதல்வர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.