புதுச்சேரி, ஜூலை 23: புதுச்சேரி திராவிடர் கழகத்தினர் தந்தை பெரியார் சிலை அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
÷பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும். வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
÷திராவிடர் கழகத்தின் மகளிரணி அமைப்பாளர் விலாசினி ராசு தலைமை வகித்தார்.
÷துணை பொதுச் செயலர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.