புதுச்சேரியில் பிரெஞ்சிந்திய கலாசார மையம் நிறுவ முயற்சி

புதுச்சேரி, ஜூலை 23: புதுச்சேரியில் பிரெஞ்சிந்திய கலாசார மையம் நிறுவுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம் என்று பிரான்சு தமிழ்ச் சங்கத் தலைவர் பி.தசரதன் கூறினார். ÷இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக
Published on
Updated on
1 min read

புதுச்சேரி, ஜூலை 23: புதுச்சேரியில் பிரெஞ்சிந்திய கலாசார மையம் நிறுவுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம் என்று பிரான்சு தமிழ்ச் சங்கத் தலைவர் பி.தசரதன் கூறினார்.

÷இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: பிரெஞ்சு மற்றும் இந்திய கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதுச்சேரியில் பிரெஞ்சிந்திய கலாசார மையம் நிறுவ உள்ளோம்.

÷புதுச்சேரி அரசின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பிரான்சு தமிழ்ச் சங்கம் பல்வேறு தமிழ் பணிகளையும், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பணிகளையும் செய்து வருகிறது.

÷தமிழர்களின் அறுவடை திருநாளாக இருக்கும் பொங்கல் விழாவை பாரிஸ் நகரில்  15.1.2012-ல் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

÷இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், தந்தைபெரியார், ப. ஜீவானந்தம், அறிஞர் அண்ணா ஆகியோருக்கு நூற்றாண்டு விழாவையும் இத்துடன் கொண்டாட உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.