புனித பிரான்சிஸ் அசிசியார் கோயில் திருவிழா தொடக்கம்

காரைக்கால், ஜூலை 23: காரைக்காலில் உள்ள பெரியபேட் புனித பிரான்சிஸ் அசிசியார் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ÷காரைக்கால் பங்குத் தந்தை எல். அல்போன்ஸ் அடிகளார் கொடியேற
Published on
Updated on
1 min read

காரைக்கால், ஜூலை 23: காரைக்காலில் உள்ள பெரியபேட் புனித பிரான்சிஸ் அசிசியார் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

÷காரைக்கால் பங்குத் தந்தை எல். அல்போன்ஸ் அடிகளார் கொடியேற்றி, திருப்பலி நடத்தினார்.

÷29-ம் தேதி மாலை வரை தினமும் சிறிய தேர் பவனி நடைபெறவுள்ளது.

÷வரும் வெள்ளிக்கிழமை திரளான மக்கள் முன்னிலையில் திருப்பலியும், 30-ம் தேதி மின் அலங்கார பெரிய தேர் பவனியும் நடைபெறுகிறது. 31-ம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

÷கொடியேற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் உதவி பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.÷ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

÷விழா ஏற்பாடுகளை பெரியபேட் கிராமப் பஞ்சாயத்தார்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.