பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பன்னாட்டு மனித உரிமைப் பேரவை சார்பில் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையைத் தடுத்து, விதிகளுக்குள்பட்டு இயங்கச் செய்ய வேண்டும்.
சென்டாக் மூலம் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வித்துறை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பரமகுரு, கலைப்புலி சங்கர், சுப்பிரமணியன், முருகையன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.