பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் கதர் வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
வாரியத்தில் அனைத்துப் பணியாளர்களுக்கும் கடந்த மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை. அதே உடனே வழங்க வேண்டும். மேலும் அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். ஓராண்டாக பணிக்கு வராத தலைமைச் செயல் அலுவலரை மாற்றி, முழு நேரம் பணிபுரியும் தலைமைச் செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்.
முதுநிலைப் பட்டியல், மாறுதல் கொள்கையை வெளியிட வேண்டும். ஊழியர்களுக்கு முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு தலைவர் எம்.கோதண்டராமன் தலைமை வகித்தார். செயலர் ஏஆர்.குமார், எஸ்.நடராஜன் உள்பட பலர்
பங்கேற்றனர்.