புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டிராய்டும் அதன் பயன்பாடுகளும் குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லுரி நிர்வாக இயக்குநர் எம். தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன் முன்னிலை வகித்தார். கணிப்பொறியியல் துறைத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார். கல்லுரி முதல்வர் மலர்க்கண் பயிலரங்கம் குறித்து பேசினார்.
சென்னை பெர்பெட்ரோ டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் மற்றும் சையத் ஆசம் ஆகியோர் ஆண்டிராய்டு தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்தனர்.
இப்பயிலரங்கில் இறுதியாண்டு கணிப்பொறியியல் மாணவர்களும், முதுநிலை கணிப்பொறியியல் மாணவர்களும் பங்கேற்றனர்.
கல்வியில் மறுமலர்ச்சி கலந்துரையாடல்: ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் "கல்வியில் மறுமலர்ச்சி' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். வாழ்க்கையும் கல்வியும் வேறல்ல என்ற நிலை வர வேண்டும், மாணவர் வெற்றிக்கு வழி சொல்லும் பொறுப்புணர்வு, நேரிய சிந்தனை மற்றும் செயல்திறன், கல்வியின் மேன்மை, வாழ்க்கை முழுவதும் கற்றலின் சிறப்பு, பெற்றோருக்கு மதிப்பு அளித்தல் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.விசுவநாதன், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் மனோகரன், ஆர்.கே.அனந்தராமன், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் முருகன், பெருமாள், வட்டாட்சியர் எஸ்வந்தையா, சுவாமிநாதன், ஆனந்த், ரஞ்சித், நாராயணசாமி, சரவணன், காவல்துறை அதிகாரிகள் சுந்தர், ஜெயராமன், சுந்தரமூர்த்தி, கணேஷ், செல்வம், முருகையன் உள்பட பலர் பங்கேற்று பேசினர். அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் 24 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.