ஹிந்தி திணிப்பை எதிர்த்து, புதுவையில் தார் பூசும் போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு மற்றும் புதுச்சேரி அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை எதிர்த்து, புதுச்சேரியில் உள்ள பல்வேறு இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிந்தனையாளர் இயக்கம், பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம் உட்பட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்திய பூரான்கள் இயக்கத் தலைவர் போன்ஸ் ரமேஷ் தலைமையில் அரவிந்தர் ஆசிரம தபால் நிலையத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது, மத்திய அரசு தனது ஹிந்தி திணிப்பு முடிவை கைவிட வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் தபால் நிலைய பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தனர்.
அதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்திய
15 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், தபால் நிலைய பலகையை போலீஸாரே சுத்தம் செய்தனர்.